Skip navigation.

யார் பையன்?

யார் பையன்?
கௌரி கிருபானந்தன்
(Kunkumam, Oct 1998)

Yaar Payyan 1998 10 30

அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும் நண்பரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க அங்கிளும், இன்னொரு ஊழியரும் ஆஸ்பத்திரிக்குச்
சென்றார்கள்.
ஆஸ்பத்திரியில் தனி அறையில் நண்பரின் மனைவி மற்றும் மாமியார் இருந்தார்கள். குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது. போனதும் குசலம் விசாரித்துவிட்டு, சற்று நேரம் பொதுவாகப் பேசிவிட்டு குழந்தைக்காக வாங்கி வந்த பரிசுகளைக் (பொம்மை, புதிய உடைகளை) கொடுத்தார்கள். இதற்குள் துயில் கலைந்து அழுத குழந்தையை மாமியார் கையில் எடுத்துக்கொண்டு அருகில் வந்து அங்கிளிடம் காண்பித்தாள்.
"குழந்தை மூக்கும் முழியுமாக ரொம்ப களையாக இருக்கிறான். அப்படியே சுப்பிரமணியத்தை உரித்து வைத்திருக்கிறான்" என்று அங்கிள் குழந்தையைப் புகழ்ந்தார்.
அதைக் கேட்டதும் அந்த அம்மாள் திடுக்கிட்டாள்.
"சுப்பிரமணியமா? யாரது?" குரலை உயர்த்தி அந்த அம்மாள் கேட்டதும் - இருவரும் வெலவெலத்துப் போய்விட்டார்கள்.
பிறகுதான் தெரிந்தது நண்பரின் மனைவி வேறு மாடியில் என்று.