வாழ்க்கையை நழுவ விடாதே

Original Author: 
டி.காமேஸ்வரி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ்
Blurb: 

திருமதி டி.காமேஸ்வரி எழுதிய தெலுங்கு நாவல் ஜீவிதம் சேஜாரநீகு, தமிழில் வாழ்க்கையை நழுவ விடாதே என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

இந்த நாவலில் வரும் வித்யா புதுமை பெண். மேலோட்டமாக பார்க்கும் போது திமிர் பிடித்த பெண்ணாக தோற்றமளித்தாலும், உண்மையில் அவள் தன் கணவனுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறாள். கணவனோ சுயபுத்தியே இல்லாதவன் போல் தன் பெற்றோர் சொன்னபடித்தான் ஆடுவேன் என்கிறான். இப்படிப்பட்ட இளைஞர்களை கொஞ்சம் சாதுரியமாக கையாண்டால் சுலபமாக வழிக்குக் கொண்டுவர முடியும்.

ஆனால் இந்தக் காலத்து இளம்பெண்கள் சினிமாவில் வரும் கதாநாயகனைப் போலவே, கணவன் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்க வேண்டும் என்ற போலி மாயையில் இருந்து கொண்டு, யதார்த்த வாழ்க்கையில் இவையெல்லாம் இல்லாத போது, அதை ஒரு பெரிய ஏமாற்றமாகக் கருதுகின்றனர்.

கணவனுடன் சின்னச் சின்ன கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரிதாக்காமல், சுமுகமான தீர்வை காணுவதில்தான் தாம்பத்திய வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கிறது.