வர்ணஜாலம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கதையின் நாயகன் கார்த்திகேயன் ஒரு ஓவியன். விதி நடத்திய நாடகத்தின் காரணமாக கைகால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும் ஸ்ரீகல்யாணி அவனுக்கு மனைவியாகிறாள்.
எந்த நிலையிலும் சக மனிதர்களை நம்பாத ஸ்ரீகல்யாணி, வாழ்க்கையின் எந்த நிலையிலும் சக மனிதர்களிடம் நம்பிக்கையை இழக்காத கார்த்திகேயன்.
இவ்விருவரின் வாழ்க்கையில் புயலாக அனுஜா நுழைகிறாள். கார்த்திகேயன் திருமணமானவன் என்று தெரியாமல் அவனை மனப்பூர்வமாக விரும்புகிறாள். அவனுடைய கொள்கைகள், நேர்மை அவளை ஈர்த்து விடுகின்றன. நாம் இல்லாத போதுகூட அடுத்த நபர் நம்மைப் பற்றியே ஒவ்வொரு நிமிடமும் யோசித்துக் கொண்டு இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான் காதல் என்று அனுஜா நம்புகிறாள்.
கார்த்திகேயன் வாழ்க்கையில் ஊகிக்க முடியாத பல திருப்பங்கள் நிகழ்கின்றன. அவன் மனதில் அனுஜாவின் நினைவுகள் அழகிய கனவாக பதிந்து போய் விடுகின்றன.
வாய்த் தவறி அடுத்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதைப் பிடித்துக் கொண்டு வாதம் புரிந்து வெற்றி பெறுவதும், அடுத்தவரை தோற்கடித்துவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி செய்வதும் உயர்ந்தவர்களின் லட்சணமாக இருந்தால் இருந்து கொள்ளட்டும். ஆனால் அடுத்தவர்கள் வாய்த் தவறி ஏதாவது சொல்லிவிட்டால் அதை கவனிக்காதது போல் நடந்து கொள்வது மிகவும் உயர்ந்தவர்களின் லட்சணம்.