உங்கள் குழந்தைகள் உங்களை நேசிக்க வேண்டுமென்றால்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

ஃபிரெஞ்ச் இலக்கியத்தில் ஒரு கதை இருக்கிறது. உன் தாயாரின் இதயத்தைக் கொண்டு வந்து கொடுத்தால்தான் என்னுடைய நோய் குணமாகும் என்று ஒரு காதலி தன்னுடைய காதலனிடம் சொன்னாளாம். காதலியிடம் இருந்த ஈர்ப்பினால் மதி இழந்த அந்தக் காதலன் தன்னுடைய தாயைக் கொன்று அவளுடைய இதயத்தை எடுத்துக் கொண்டு போகும்போது வழியில் கல் தடுக்கி கீழே விழுந்து விட்டானாம்.

ஐயோ மகனே ... அடிப்பட்டு விட்டதா கண்ணா என்று அந்தத் தாயின் இதயம் கேட்டதாம்.

குழந்தைகளிடம் அன்பையும், பாசத்தையும் பொழிந்து கொண்டே அவர்களை ஓழுக்கத்துடன் வளர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. ஒழுக்கத்துடன் வளராத குழந்தைகள் எதிர்காலத்தில் தடம் மாறிப் போவது நிச்சயம். அன்பையும், கண்டிப்பையும் சரியான விகிதத்தில் கையாள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.

குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவது ஏப்படி? குழந்தைகள் நம்மை நேசிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

திரு. எண்டமூரி வீரேந்திநாத் வித்தியாசமான முறையில் பிரச்னையை அணுகுவதோடு தீர்வையும் சொல்லி இருக்கிறார்.