உங்களை நீங்களே வெற்றி கொள்ளுங்கள்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

முதல் நாள் இரவு அவனுடைய மனைவி இறந்து போய்விட்டாள். மறுநாள் காலையில் கோர்ட் கேஸில் அவனுடைய சொத்து முழுவதும் பறிபோய் விட்டதாகத் தகவல் வருகிறது. அலுவலகத்திற்குச் சென்ற போது ஏதோ ஊழல் விவகாரத்தில் அவன் பெயரும் அடிபட்டதால் வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று தெரிகிறது.

அவமானத்தினால், துக்கத்தினால் அவன் நலிந்து போய்விட்டான். அன்று இரவு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான். ஆனால் யோசித்துப் பார்த்த போது தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம் என்று தோன்றியது. இருந்த வீட்டை விற்று அந்தப் பணத்தில் சிறிய அளவில் வியாபாரத்தைத் தொடங்கினான்.

சில மாதங்கள் கழித்து, ஏழைப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். அவனுடைய வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. அன்பான மனைவி, மகிழ்ச்சியான வாழ்க்கை அவனுக்குச் சொந்தமாகிவிட்டன. தன்னுடைய பலவீனங்களை வெற்றி கொண்டு வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்து விட்டான்.

தோல்விகளை வெற்றியின் ஏணிப்படிகளாக மாற்றிக் கொள்வது எப்படி என்று வழிகாட்டும் புத்தகம் இது.