துளசிதளம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

திரு எண்டமூரி வீரேந்திநாத் அவர்கள் தெலுங்கில் எழுதிய துளசிதளம் என்ற நாவல் அதே தலைப்பில் தமிழாக்கம் செய்யபட்டுள்ளது.

இந்த நாவல் துளசி என்ற சிறுமியை மையங்கொண்டு எழுதப்பட்டுள்ளது. பில்லிசூனியம், புதவித்தைகள், மாந்திரீகம் .... இந்த கம்ப்யூட்டர் யுகத்திற்கு பொறுத்தமில்லாத வார்த்தைகளாகத் தோன்றினாலும் நம் நாட்டில் இன்னும் சில கிராமங்களில் இவற்றை நம்பும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காஷ்மோரா என்ற பூதவித்தையை பிரயோகம் செய்து துளசியைக் கொலை செய்வதற்கு காத்ரா என்ற மந்திரவாதியை ஏற்பாடு செய்கிறார்கள், சுவாமியும் அவருடைய சீடர்களும். பத்து வயது நிரம்பும் முன் துளசி இறந்து போனால் அவள் பெயரில் ராபர்ட் விட்டுச் சென்ற கணிசமான ரொக்கம் அவர்களுயை ஆசிரமத்திற்கு வந்து சேரும்.

காஷ்மோராவின் பிடியில் சிக்கிய துளசி நோய் வாய்பட்டு நாளுக்கு நாள் மெலிந்து போகிறாள். காரணம் புரியாமல் அவளுயை பெற்றோர் சாரதா, ஸ்ரீதர் தவிக்கிறார்கள்.