துணையைத் தேடி

Original Author: 
டி.காமேஸ்வரி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

கதாநாயகி ஜெயந்தி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். வேலைக்குப் போகிறவள். கணவனாக வரப் போகிறவனைப் பற்றி சில எதிர்பார்ப்புகளை, கனவுகளை வைத்திருக்கிறாள். வந்த வரன்களை எல்லாம் தட்டிக் கழிக்கிறாள். தன்னை பெண் பார்க்க வந்த கோபாலகிருஷ்ணனை அவள் மறுத்துவிட அவள் தங்கை தமயந்திக்கு அந்த வரனை முடிவு செய்கிறார்கள். இதனால் கோபம் கொண்ட ஜெயந்தி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். முன்கோபமும், விட்டுக் கொடுக்காத மனப்பான்மையும் அவள் வாழ்க்கையின் போக்கையே மாற்றி விடுகின்றன.
பெண்களுக்கு கல்வி தைரியத்தை, தனித்தன்மையை தர வேண்டுமே தவிர பிடிவாதத்தை, அகம்பாவத்தைத் தரக் கூடாது. வேலைக்கு போவதால் கிடைத்த பொருளாதார சுதந்திரத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது.