தூக்கு தண்டனை

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

"இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை! லாயர் சிரஞ்சீவிக்கு தூக்குதண்டனை!
சுசீலா என்ற இளம் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக லாயர் சிரஞ்சீவிக்கு செஷன்ஸ் கோர்ட் ஜட்ஜ் திரு பரசுராமன் இன்று தூக்குதண்டனை தீர்ப்பு வழங்கினார். பிரபல லாயர் பூஷணத்தின் தங்கை மகள் அர்ச்சனாவுக்கும், சிரஞ்சீவிக்கும் திருமணம் நடக்கப் போவதாக பேச்சு அடிபட்டதால் மக்களுக்கு இடையே இந்த வழக்கு மேலும் முக்கியத்துவம் பெற்று விட்டது.
தூக்குதண்டனை என்பதால் இந்த தீர்ப்புக்காக ஹைகோர்ட்டிலிருந்து அனுமதி பெற வேண்டியிருக்கும். இதற்கிடையில் குற்றவாளி விரும்பினால் மேல்கோர்ட்டில் அப்பீல் செய்துகொள்ளலாம். ஆனால் கீழ் கோர்ட்டிலேயே குற்றத்தை ஒப்புக்கொண்ட சிரஞ்சீவி மேல் கோர்ட்டுக்கு போகக்கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த கேஸ் விஷயமாக பப்ளிக் பிராசிக்யூட்டர் பேசும் போது சிரஞ்சீவி ஒரு லாயராக இருந்தும் இப்படிச் செய்து அந்த தொழிலுக்கே களங்கம் கற்பித்து விட்டதாக குற்றம் சாட்டினார். செல்வி அர்ச்சனா வெளிநாட்டில் இருப்பதாக தெரிகிறது."