சொல்லாத சொல்லுக்கு விலை எது?

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

மணி ஏழாகப் போகிறது. புதருக்குப் பின்னால் அதே ஜோடி. சுமார் மூன்று மாதங்களாக அவன் பார்த்து வருகிறான். சரியாக ஐந்தரை மணிக்கு அவர்கள் அங்கே வந்து விடுவார்கள். ஏழு.. ஏழேகால் வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். நாரோ கட் பேண்ட் உடுத்தியிருப்பான் அவன். அந்தப் பெண் ஆபீசிலிருந்து நேராக இங்கே வந்து விடுவாள் போலும். பெரிய ஹெண்ட்பேக் அவளுக்குப் பக்கத்தில் எப்போதும் இருக்கும்.
அவன் பேசிக் கொண்டிருப்பான். அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்.
மூன்று மாதங்களாக, தினமும் இரண்டு மணி நேரம், அதாவது நூற்றி என்பது மணி நேரம் அவர்கள் என்னதான் பேசிக் கொண்டிருப்பார்கள்?