சிநேகிதியே

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனா ராணி அவர்கள் எழுதிய ஈ ஜீவிதம் நாதி என்ற நாவலின் தமிழாக்கம் இது.

பிரியம்வதா, மதுரா சிறுவயது முதல் இணைபிரியாத தோழிகளாக வளர்ந்து வருகிறார்கள். சொந்த பந்தம் என்று யாரும் இல்லாத நிலையிலும் பிரியம்வதா தன்னுடைய தனித்தன்மையினால் நல்ல விதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள்.

பெற்றோரின் பாதுகாப்பில் வளர்ந்த மதுரா இளமையின் வேகத்தில் முன்பின் விளைவுகளை யோசிக்காமல் டானியைத் திருமணம் செய்துகொள்கிறாள். டானி கயவன் என்று தெரிந்த பிறகும் அவனை விட்டு விலக முடியாமல் புதைகுழியில் சிக்கிக் கொள்கிறாள்.

பிரியம்வதாவின் உதவியால் மதுரா மறுபிறவி எடுக்கிறாள். தனித்தன்மையை ஏற்படுத்திக்கொண்டு புதிய வாழ்க்கையைத் தேடிப் போகிறாள்.