செகரெட்ரி

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்கள் எழுதிய முதல் நாவல் இது. 1965ல் தெலுங்கு வாரப் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மக்களுக்கிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. இதுவரையில் எழுபத்தைந்து முறை மறுபதிப்பு செய்யபட்டதிலிருந்தே இந்நாவலின் சிறப்பை புரிந்துகொள்ள முடியும். இதுவரையில் எந்த மொழியிலும் எந்த நாவலுக்கும் கிடைக்காத சிறப்பு.

இந்த நாவலின் கதாநாயகன் ராஜசேகரை கன்னிப் பெண்களின் கனவுலக ராஜகுமாரனாக உருவகப்படுத்தி, மற்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டதிலிருந்தே இந்த நாவலுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை, புகழை புரிந்துகொள்ள முடியும்.

ஆரம்பம் முதல் தெளிந்த நீரோடை போலவே ஓடினாலும், கடைசி முப்பது பக்கங்களை படிக்கும் போது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு தொடரின் இறுதி ஆட்டம் ஆடுவது போல் ஒரே பரபரப்பு. படிக்கப் படிக்க பலவிதமான உணரச்சிகளின் சுழற்சியில் சிக்கிவிடுவது உறுதி. நாவலை படித்துக் கொண்டிருக்கும் போது யாராவது வந்து விட்டாலோ, தொந்தரவு செய்தாலோ கோபம் வரும் அளவுக்கு கதை நம்மை இழுத்துச் செல்கிறது.

ராஜசேகர், ஜெயந்தி, சுமதி, சிவராமன் போன்ற கனமான கதாபாத்திரங்களைக் கையாண்டு, நம் முழு கவனத்தையும் புத்தகத்தை விட்டு நகராமல் எழுதிய விதம், ஆசிரியரின் திறமை பாராட்டுக்கு உரியது. அதனால்தான் நாவல் ராணி என்று அழைக்கப் படுகிறார் போலும்.