சங்கமம் I & II

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

அழகும், அபிமானமும் நிறைந்த ரோஜா - அவளை மனப்பூர்வமாக ஆராதிக்கும் அனந்த் - பிடிவாதத்திற்கு மறுபெயராக திகழ்ந்த விஜய். விதி வசத்தால் கணவனைப் பிரிந்து நடைப் பிணமாய் வாழ்ந்து, துயரம் நீங்காமலேயே மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்ட சாவித்திரி. தங்கையின்பால் பரிவும், பாசமும் கொண்ட சங்கரன், அவர் மனைவி சுந்தரி - தன்னுடைய அழகால் மற்றவர்களை ஈர்க்க முயலும் லாவண்யா - இந்தக் காலத்தில் கொள்ளைகள் நடக்காதது எங்கே என்று தன்னுடைய செயல்களை, வாழ்கையின் முறையை நியாயப்படுத்திக் கொள்ளும் செந்தூ ... உண்மை தெரிந்த பிறகும், அதை வெளியிட முடியாமல் பாசத்தால் தவிக்கும் தந்தை வேணுகோபாலன் ..

மற்றும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல கதாபாத்திரங்களுடன் அறிமுகம் செய்துகொள்ள, இந்த நாவலை கையில் எடுத்தாலே போதும் ... காட்சிகள் நம் கண்களுக்கு முன்னால் திரைப் படமாய் ஓடும்.