பிரளயம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திரு எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள் எழுதிய யுகாந்தம் என்ற நாவல் தமிழாக்கம் செய்யபட்டு பிரளயம் என்ற தலைப்பில் வெளியிடப் பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இடைவிடாமல் ஒரே பாதையில் பயணம் செய்துகொண்டிந்த கோடானு கோடி நட்சத்திரங்களுக்கு இடையில் ஒரு சின்ன அசைவு, வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் நிகழந்தது. மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்பியது. மிகவும் குறைவான நேரம் நிகழ்ந்த அந்த மாற்றத்தை உலகத்தில் எந்த விஞ்ஞான கருவியும் கண்டுபிடிக்கவில்லை.

பூமி வழக்கம் போல் சுழன்று கொண்டு இருந்தது. சூரியன் உதயிப்பதும், அஸ்தமிப்பதும் வழக்கம்போல் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் பூமிக்குச் சில கோடி மைல்கள் தொலைவில் இருக்கும் பராக்ஸிமா செஞ்சுரி என்று அழைக்கப்படும் அந்த நட்சத்திரம், தன்னுடைய பாதையை விட்டு மயிரிழை விலகி மெதுவாக நழுவிப் போகத் தொடங்கியது.

பூமியின் மீது அதன் பாதிப்பு, பிரளயம் நிகழப்போவது உறுதி என்று தெரிந்ததும் மக்கள் மனதில் ஏற்படும் பீதி, சுயநலம் மிகுந்த செயல்கள், போலி சாமியார்களில் மோசடி ..... எல்லாம் கண்ணெதிரில் நடப்பது போல் காட்சிகள் வர்ணிக்கப்பட்ட விதம் வாசகர்களை கதையோடு ஒன்றிப் போகச் செய்துவிடுகின்றன.