பட்டிக்காட்டு கிருஷ்ணன்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

திரு. எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள் எழுதிய செங்கல்வ பூதண்ட என்ற தெலுங்கு நாவல் தமிழாக்கம் செய்யப்பட்டு பட்டிக்காட்டு கிருஷ்ணன் என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

அப்பாவியான பட்டிக்காட்டு இளைஞன் கிருஷ்ணன், அநியாயமாக சமுதாயத்தின் துஷ்டசக்திகளின் சதிக்கு பலியாகி ஜெயிலுக்குப் போகிறான்.

காரணம் எதுவாக இருந்தாலும், யார் எப்படி வந்து சேர்ந்து கொண்டாலும் சிறைச்சாலைதான் எல்லா புரட்சிகளுக்கும் ஆரம்பப் பாடசாலை.

சிறைச்சாலையில் புரட்சி நாயகன் தாகூருடன் கிருஷ்ணனுக்கு அறிமுக்ம் ஏற்படுகிறது. சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளைப் பற்றியும், அதை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தைப் பற்றியும் தாகூர் கிருஷ்ணனுக்கு எடுத்துச் சொன்னதோடு அவனுள் மறைந்திருக்கும் சக்தியைத் தூண்டிவிடுகிறான்.

ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு கிருஷ்ணன் தன்னுடைய பகையைத் தீர்த்துக்கொள்வதில் வெற்றி அடைந்தாலும், அது எவ்வளவு சின்ன விஷயம் என்று புரிந்துகொள்கிறான். சமுதாயத்தை சீர்திருத்தி அமைக்கும் முயற்சியை புரட்சி மூலம் சாதிக்க முடியும் என்று நம்பி அந்த பாதையில் நடந்து போகிறான்.