பணம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

"தெரிந்துவிட்டது" என்றாள் லக்ஷ்மி நிதானமான குரலில். "எப்போது பணம் உன்னை ஆட்டுவிக்கத் தொடங்கியதோ, எப்பொழுதிலிருந்து நீ மனசாட்சியை ஏமாற்றிக் கொண்டு ஊசலாடத் தொடங்கினாயோ, அன்றைக்கே தெரிந்து விட்டது நாம் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய முடியாதென்று. காலையில் எழுந்ததுமே நான் செய்யும் பிரார்த்தனை என்ன தெரியுமா? 'கடவுளே! என் நண்பனுக்கு பணத்தின் மீது உள்ள மோகத்தைக் கொஞ்சமாவது குறைத்து விடு' என்றுதான். காந்தி! உன் சிநேகிதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இத்தனை பேரைத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு நீ எதையும் சாதிக்கப் போவதில்லை. நினைவில் வைத்துக்கொள்."