நிகிதா

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

இந்தக் கதையின் நாயகி நிகிதா - பாரதியார் கனவு கண்ட புதுமைப் பெண்ணுக்குச் சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். சரியான நேரத்தில்,சரியான முடிவு எடுப்பது எவ்வளவு அவசியமோ, உரிய நேரத்தில் அதைச் செயல் படுத்துவதும் அத்தனை முக்கியம் என்று உறுதியாக நம்புகிறாள்.அவினாஷை மனப்பூர்வமாக விரும்பினாலும், அவனாகப் பெற்றோரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமே தவிர, தன்மீது இருக்கும் காதலால், அவர்களை எதிர்த்து, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை ஏற்க மறுக்கிறாள்.

பெற்றோரின் கவனிப்பு சரியாக இல்லா விட்டால் குழந்தைகள் எப்படிச் சீர்கெட்டுப் போவார்கள் என்பதற்கு வரூதினியும், ப்ரீதமும் சாட்சியாக நிற்கிறார்கள். அறியாமையில் வாழ்க்கையில் தவறான பாதையில் காலடி எடுத்து வைத்த தாத்ரி, நிகிதாவின் உதவியால் தனக்கென்று ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதோடு, அதில் வெற்றியும் அடைகிறாள்.