முள்பாதை I & II

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாரணி அவர்களின் நாவல் "மீனா" முள்பாதை என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக வந்துள்ளது.
அவருடைய எல்லா படிப்புகளும் எனக்கு விருப்பமானவை என்றாலும் முள்பாதை மற்றும் சங்கமம் இரண்டும் எனக்கு மிகமிக பிடித்தமானவை.
இனி முள்பாதை பற்றி சிறிய அறிமுகம்
.சில சிறைசாலைகள் இருக்கும். அவற்றுக்குக் கதவுகள், பூட்டுகள் எதுவும் இருக்காது. கட்டுப்பாடு, அந்தஸ்து என்ற பெயரில் மகள் மீனாவை அது பண்ற கண்ணுக்குத் தெரியாத சிறைச்சாலையில் வளர்த்து வருகிறாள் கிருஷ்ணவேணி
இன்னொரு குழந்தை பிறந்தால் மகள் மீது இருக்கும் அன்பு குறைந்து விடுமோ, தாயின் அன்பைப் பகிர்ந்தளிக்க வேண்டி இருக்குமோ என்ற அளவுக்கு மகள் மீது ச்தீதமான பாசத்தை வைத்திருக்கும் கிருஷ்ணவேணி மகளுடைய வருங்கால கணவனை தானே முடிவு செய்கிறாள். மாப்பிள்ளை சாரதியை மீனாவுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை..
வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் நினைவில் இருக்கப் போவதில்லை. ஆனால் சிறுவயதில் மாமி கிருஷ்ணவேணி செய்த அவமானம் கிருஷ்ணன் மனதில் ஆறாத வடுவாகத் தங்கிவிடுகிறது. ஆனால் மாமாவின் மகள் மீனாவைப் பார்த்ததும் அவன் மனதில் இனிமையான உணர்வு ஏதோ ஒன்று மலர்கிறது.
இவர்களின் பிடிவாதங்கள், ஏமாற்றங்கள் மீனாவின் வாழ்க்கையை எப்படி திசை திருப்புகின்றனவோ தெரிந்து கொள்ள முள்பாதை நாவலை கையில் எடுங்கள்.

eBooks available for purchase at: