மீட்சி

Original Author: 
ஒல்கா
Book Cover: 
Publisher: 
பாரதி புத்தகாலயம்
Blurb: 

தெலுங்கில் திருமதி ஒல்கா அவர்கள் எழுதிய "விமுக்தா" என்ற புதினம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு "மீட்சி" யாக மலர்ந்திருக்கிறது. சீதையின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட ராமாயணக் கதைகள் இவை.
மணல்குடம்: "கணவன் தவிர வேறு உலகம் இல்லை என்று நினைப்பார்கள் பெண்கள். உண்மைதான். ஆனால் ஏதோ ஒருநாள் கணவன் தன் உலகத்தில் உனக்கு இடம் இல்லை என்று என்று சொல்லுவான். அப்பொழுது நமக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? மகன்களைப் பெறுவதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைப்போம். அந்த மகன்கள் ஆண்களின் வம்சத்தின் குலக்கொழுந்தாகி, நாம் உணர்வதற்குள் நம் கையை விட்டுவிட்டு தந்தையின் கட்டுக்குள் சென்று ஆணைகளுக்கு உட்படுவார்கள். அல்லது அவர்களே நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பவர்கள் ஆவார்கள். எதற்காக அப்படிப்பட்ட குழந்தைகளைப் பெறுவது?