மீண்டும் துளசி

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

இந்நாவல் துளசி தளம் நாவலின் தொடர்ச்சிதான் என்றாலும், தனியாகப் படித்தாலும் அதே அளவுக்கு விறுவிறுப்பும், கையில் எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்குத் திருப்பங்களும் நிறைந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல. பூஜைகள், மந்திர தந்திரங்களால் மக்களை ஏமாற்றி வந்த சித்தேஸ்வரி தேவியைக் கதாநாயகி துளசி எதிர்க்கிறாள். அங்கே நடக்கும் மோசடிகளைக் கண்டுபிடிப்பதற்காகப் புலிக் குகையில் நுழைவது போல் சித்தேஸ்வரி தேவியின் கோவிலுக்குள் நுழைகிறாள்.

அங்கே தார்க்காவும் அவளும் சந்தித்துக் கொள்கிறார்கள். பழி திர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் பிஸ்தா கிராமத்திலிருந்து துளசியைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் மந்திரவாதிதான் தார்க்கா. அரத்யுங்க வித்தையால் கண்பார்வையாலேயே எதிராளியை எரித்து சாம்பலாக்கக் கூடிய அளவுக்கு வல்லமை படைத்தவன்.

தார்க்காவின் மனதில் துளசியின்பால் ஏற்படும் உணர்வைக் காதல் என்று சொல்ல முடியுமா? அவனுக்கே அது புரியவில்லை. துளசியின் நலனை வேண்டி அவன் மேற்கொண்ட முயற்சிகளை ஜெயதேவ், சாரதாவால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு அவன் எதிரியாகத் தென்படுகிறான்.

தார்க்காவின் முயற்சி பலித்ததா? தார்க்காவின் மனதைத் துளசி புரிந்து கொன்டாளா?

இந்தக் கேள்விகளுக்கு வாசகர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.