லேடீஸ் ஹாஸ்டல்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

லேடீஸ் ஹாஸ்டல் என்ற தெலுங்கு நாவல் அதே தலைப்பில் தமிழியில் வெளியிடப்பட்டுள்ளது. கதாநாயகன் ராயன்னா பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன். கிரிக்கெட் விளையாட்டு வீரன். கதாநாயகி கிரண்மயி சைக்காலஜி படித்தவள். அவர்களின் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கபடுகிறது.

முதலிரவு அன்றே ராயன்னா மீது லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கும் இளம் பெண் ஒருத்தியைக் கொலை செய்த குற்றம் சுமத்தப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த கொலையை அவன்தான் செய்தான் என்பது போல் பல சாட்சியங்கள் போலீஸாருக்குக் கிடைக்கின்றன.

ராயன்னா மனதளவில் சோர்ந்து போகும் போது, கிரண்மயி அவனை தேற்றி, வெற்றியின் பாதையில் நடத்திச் செல்கிறாள்.

கிரிக்கெட் தேர்வு குழுவில் நடக்கும் அநியாயங்கள், கிரண்மயி லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சேகரிக்கும் தகவல்கள் எல்லாம் படிக்கும் போது வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படும் என்றால் அது மிகையில்லை.