கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

திருமதி யத்தனபூடி சுலோசனா ராணி அவர்கள் தெலுங்கில் எழுதிய மோகிதா என்ற நாவலின் தமிழாக்கம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

கதாநாயகன் தருண் தன்னுடைய சிறுவயது தோழி அனுவுக்காக இருபது வருடங்களாக தேடிக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய பெற்றோர்கள் அவளுக்கு செய்த அநியாயத்திற்கு பரிகாரமாக அவளையே திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான். பெற்றோர்கள் அவனைத் திருமணத்திற்காக வற்புறுத்தியபோது மறுப்பு தெரிவிக்கிறான்.

மோகினி அவன் வாழ்க்கையில் நுழைகிறாள். இருவீட்டாரின் விருப்பமும் சேர்ந்துகொள்ள மோகினி அவனுக்கு மனைவியாக வருகிறாள். மகன் பிறந்த பிறகும் தருண் அனுவைத் தேடுவதை மோகினியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருவருக்கும் நடுவில் விரிசல் ஏற்படுகிறது. தருணிடமிருந்து விலகிப் போய் விடவேண்டும் என்று மோகினி முடிவு செய்கிறாள். அந்தச் சமயத்தில் அனு பற்றிய தகவல் கிடைத்து விட்டதாக செய்தி வருகிறது. மனம் நலிந்து போன நிலையில் மோகினி தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள்.

தருண், மோகினியின் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் எப்படி நீங்கியது என்று தெரிந்துகொள்ள நாவலை படியுங்கள்.