இதயகீதம்

Original Author: 
யத்தனபூடி சுலோசனா ராணி
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

ராகவன் மனைவி பானுமதி ஆடம்பரமாகவே வாழ்ந்து பழகியவள். அவளுடைய ஆடம்பரங்களுக்கு ராகவன் வருமானம் ஈடு கொடுக்க முடியவில்லை. வீடு ஏலத்திற்கு வருகிறது. ராகவன் தற்கொலை செய்து கொண்டதும் மூன்று மகள்களுடன் பானுமதி நடுத்தெருவுக்கு வந்து விடுகிறாள்.
கொஞ்சமாவது உழைத்தால்தான் வாழ்க்கையின் அடிப்படை வசதிகளை பெற முடியும் என்ற நிலைமை. எப்படியாவது உழைத்து ஒரு வழியை தேடிக் கொள்வோம் என்று கடைசி மகள் சுஜானா சொன்னதை பானுமதியால் ஏற்க முடியவில்லை. யாரிடமாவது கடன் வாங்கி அவர்கள் மூலமாகவே ஏதாவது பிசினெஸ் தொடங்க வேண்டும் என்பது பானுமதியின் எண்ணம். அதற்கான் வழிகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.