தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

திரு எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களை ஒரு நாவல் ஆசிரியராகத்தான் தமிழ் வாசகர்களுக்குத் தெரியும். அவர் எழுதிய சிறுகதைகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் எண்ணம்தான் இந்தப் புத்தகம் உருவாக காரணமாக இருந்தது.

இதில் வெளியிடப்பட்ட கதைகளில் 'பந்தயம்', 'சுவாமிநாதனின் போட்டோ', 'பெண்களுக்கு மட்டும்' என்ற கதைகள் குங்குமச் சிமிழிலும், 'மன்னித்து விடு சுப்ரியா' என்ற கதை கணையாழிலும் வெளிவந்தன.

'ஒரு சனிக்கிழமை இரவு' என்ற சிறுகதை அம்பலம் என்ற மின் இதழில் வெளியானது. (e-magazine) அந்தச் சமயம் அம்பலம் இதழின் ஆசிரியாராக இருந்த திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் அந்தக் கதையை படித்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்தக் கதை தன்னை ரொம்பவும் பாதித்து விட்டதாகவும், மனித வாழ்க்கையில் சில கடினமான, கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றாலும் எஞ்சிய வாழ்க்கையை மனச் சுமையோடு கழிக்க வேண்டிய கட்டாயத்துயும் குறிப்பட்டார். கதையின் கருவைப் பற்றியும், மொழி பெயர்ப்பை பற்றியும் அவர் பாராட்டு தெரிவித்த போது உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன்.

இதில் வெளியிப்பட்ட கதைகள் அனைத்துமே சமுதாயத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு வர்க்கத்தினரிடையே ஏற்படுகின்ற இன்ப, துன்பங்களை, உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. உணர்ச்சிகளை அனுபவிப்பதும், வெளிப்படுத்துவதும், அடுத்தவரின் உள்ளத்தை அறிந்து கொள்வதும்தான் மனித வாழ்க்கையின் முக்கிய இயக்கம். நமக்கு உறவுகள் அவசியம். உறவுகள் அமைவதற்கும், தொடர்வதற்கும் உணர்ச்சிகள்தான் காரணமாக இருக்கின்றன.

மனிதனின் மீட்சி அவனுடைய மனசாட்சி மூலம்தான் பெற முடியும் என்றாலும் வாழ்க்கையின் மதிப்பீடுகளுக்கு மறு பரிசோதனை அவசியம் என்ற கருத்தை சில கதைகளில் உணருகிறோம்.

Sample story from this collection பெண் / பெண்