அந்தர்முகம்

Original Author: 
எண்டமூரி வீரேந்திரநாத்
Book Cover: 
Publisher: 
அல்லயன்ஸ் கம்பெனி
Blurb: 

மனித உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் சுயநலம் எத்தனை விதமாக இருக்கும் என்பதை தனக்கே உரிய நடையில் ஆசிரியர் சித்தரித்து உள்ளார். அச்சுயநலத்தைக் கண்டு மனிதர்களைத் துவேஷிப்பதும், தனக்குள்ளேயே ஒடுங்கிப் போவதுமாய் இருந்த நாயகனை (இந்நாவலில் நாயகனின் பெயர் எங்கேயும் பிரஸ்தாபிக்கப்படாதது ஒரு சிறப்பு அம்சமாகும்) பிரணவி என்ற சிநேகிதி, அன்பு எனும் மந்திரக்கோலால் அவன் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறாள்.

இறப்பதற்கு முன் அவள் அவனுக்கு எழுதிய கடிதம் அவன் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைக்கிறது. வயதான பிறகு படுக்கையில் நோயாளியாகக் கிடந்தவன், இறந்து போன பிறகு சுவர்க்கத்தில் கடவுளைச் சந்தித்து, மனித உறவுகளின் சிறப்பைப் பற்றி வாதனை புரிகிறான். கடவுளால் சாகா வரம் பெற்று இவ்வுலகிற்கு அதே நிலையில் வருகிறான். மனித நேயம் அறவே இல்லாத உறவுகளைக் கண்டு அவனுக்கு மறுபடியும் வெறுப்பு ஏற்படுவதோடு, அதே எண்ணத்துடன் சுவர்க்கத்துக்குச் செல்கிறான். கடவுளிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளப் போகுமுன், வழியில் பிரணவியைச் சந்திக்கிறான். தன்னலமற்ற அவளுடைய அன்பு, மற்றொரு முறை அவன் எண்ணங்களை மாற்றி விடுகிறது.